பிள்ளையார் துதி
பிள்ளையார் கணபதி விநாயகர் மனைவியரோடு எழுந்தருளுக!
ஓம ஓக யாக யக்ஞ வேள்வித் தீயே! மூலாதாரப் பிறணவமாகுக!
சித்தி புத்தி அத்தி முத்தி வல்லபையாம் தீமை தீய்க்கும் தீயே!
இருளகற்றிடுக! இன்னல் தவிர்த்திடுக! அருள் நலம் வழங்கிடுக!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

Comments
Post a Comment