முருகன் துதி
ஓம் சித்தாந்த வித்துக்கள் பயிராகிப் பயனாகுக
ஓம் ஆலமர் கடவுட் புதல்வ! முருக! காத்திடுக
ஓம் வடிவேலா! வாழ்வியல் பேரின்பம் நல்கிடுக
ஓம் சரவணபவா! குகா! வேலா! முருகா! கந்தா! நாமாகிடுக!
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்றுருவாய் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்றுருவாய் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

Comments
Post a Comment